Page Loader
'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு

'போதைப்பொருள் விற்பனைக் கழகம்': மு.க.ஸ்டாலினின் மருமகள் ஜாபர் சாதிக்கின் படத்தை இயக்கியதாக பாஜக குற்றச்சாட்டு

எழுதியவர் Sindhuja SM
Mar 10, 2024
09:07 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக பிரமுகருடனான உறவை விளக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக இன்று கேட்டுக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தயாரித்த படத்தை மு.க.ஸ்டாலினின் மருமகள் இயக்கியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம், தற்போது "Drug Marketing Kazhagam"(DMK) ஆக மாறியுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. நேற்று, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்(NCB) முன்னாள் திமுக செயல்பாட்டாளரான ஜாபர் சாதிக்(36) என்பவரை கைது செய்தது. 2000 கோடி போதைப்பொருள் கடத்தலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இதை விமர்சித்த பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன், ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை மு.க.ஸ்டாலினின் மருமகள் இயக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் 

அரசியல் வட்டாரங்களை போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயனப்டுத்தினாரா ஜாபர் சாதிக்?

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி, ஜாபர் சாதிக் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்கும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை அவரது சமூக வலைத்தள பதிவுகள் நன்றாக காட்டுகின்றன." என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக், தனது அரசியல் வட்டாரங்களை போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தமிழ் மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை என்சிபி விசாரணை நடத்தி வருகிறது.