Page Loader
சென்னை மக்களே, கவனிக்கவும்! 2 மண்டலங்களில் குடிநீர் வழங்கல் இல்லை!
2 மண்டலங்களில் குடிநீர் வழங்கல் இல்லை

சென்னை மக்களே, கவனிக்கவும்! 2 மண்டலங்களில் குடிநீர் வழங்கல் இல்லை!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2024
11:53 am

செய்தி முன்னோட்டம்

சென்னையின் சில பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள், குழாய் பழுதுபார்க்கும் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாக, குறிப்பிட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் குடிநீர் பிரதான குழாயின் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களில் சில இடங்களில் செப்டம்பர் 24 முதல் 26ம் தேதி வரை குடிநீர் வழங்கல் இருக்காது. இந்த தகவல் குறித்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், செப்டம்பர் 24 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 காலை 4 மணி வரை பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் 

குடிநீர் விநியோகம் தடை

தேனாம்பேட்டை மண்டலத்தில் ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூா், நந்தனம், திருவல்லிக்கேணி, அபிராமபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கல் நிறுத்தப்படும். அடையாறு மண்டலத்திலும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இதேபோல் குடிநீர் வழங்கல் இருக்காது. இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரமாக குடிநீர் தேவைப்பட்டால், இணையதளத்தின் மூலம் குடிநீர் லாரிகளை முன்பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களுக்கு லாரிகள் வழக்கமாக குடிநீர் விநியோகிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.