
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
செய்தி முன்னோட்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
இந்த மாற்றம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, அவர்கள் விருப்ப படத்தின் மதிப்பெண்ணும் இருந்து மதிப்பெண் பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தற்போது வரை பத்தாம் வகுப்பு மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் , சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு விருப்பப்பாடமாக தேர்வு செய்து வருகின்றனர்.
தேர்வுமுறை
மாற்றம் பெறும் தேர்வுமுறை
பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் விருப்பப்படத்திற்கான மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
வரும் கல்வியாண்டில் இருந்து 2024-25 ல் இருந்து புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதன்படி தமிழ் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்கும் சேர்த்து 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணாக 35 கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
எனினும், தமிழை தாய்மொழியாக கொண்ட 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.
விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி பொருந்தும்.
ட்விட்டர் அஞ்சல்
பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்
#BREAKING || பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் - விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
— Thanthi TV (@ThanthiTV) February 16, 2024
அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்
விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் = 600… pic.twitter.com/RbyCLeYkJV