
தொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி
செய்தி முன்னோட்டம்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டிற்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2007ஆம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டவுடன் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது.
அதற்கு பிறகு, தற்போது சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியுள்ளது.
சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே இந்த மாநாட்டுக்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலத்திற்கு வந்துள்ளனர்.
இந்த மாநாட்டை திமுக எம்பி கனிமொழி, கட்சி கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
ட்விட்டர் அஞ்சல்
திமுக இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றிய கனிமொழி எம்பி
#JUSTIN திமுக இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றிய துணை பொதுச் செயலாளர் கனிமொழி #DMKYouthWingConference #Salem #DMK #MKStalin #Udhayanidhistalin #Kanimozhi #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/QQjTS92DwR
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 21, 2024
ட்விட்டர் அஞ்சல்
சேலம் மாநாட்டு திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நீட் விலக்கு கையெழுத்து அட்டைகள்
#JUSTIN ‘நீட் விலக்கு நம் இலக்கு' - நீட் தேர்வுக்கு எதிராக பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் சேலம் மாநாட்டு திடலில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது #DMKYouthWingConference #Pethanaickenpalayam #NEET #Salem #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/u9uQ2KGIP5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 21, 2024