Page Loader
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2024
07:54 pm

செய்தி முன்னோட்டம்

திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான 86 வயதான துரைமுருகன், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது தொடர்பான பிரச்சனைகளால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு வரும் அமைச்சர் துரைமுருகன், சென்னை செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஏறும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரது உடல்நிலையைக் கண்டு பதற்றமடைந்த ஆதரவாளர்கள், உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அமைச்சர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சை

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

வேலூர் தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துரைமுருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post