இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி
தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது. அதன்படி, விசிக மற்றும் மதிமுக இரண்டு கட்சிகளும், அவர்களுடைய கட்சியின் சின்னத்தில், அதாவது தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்பது உறுதியானது. அதோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு, ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் இதுவரை, மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், ஐ.யு.எம்.எல் மற்றும் கொ.ம.தே.க கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நிறைவு பெறவில்லை. அதன் பின்னரே தொகுதி பங்கீடு குறித்து விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.