முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் புகாரின் பேரில், திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளிதரன் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவிற்கும் இடையே அரசியல் போட்டி நிலவி வரும் சூழலில், சமீபத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியொன்றில் பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு
திமுக கூட்டத்தில் சர்ச்சைப் பேச்சிற்கு தவெகவினர் எதிர்ப்பு
அந்தக் கூட்டத்தில் எம்பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன், முதல்வர் விஜய்யை ஒருமையிலும் தரக்குறைவாகவும் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது.
கவுன்சிலர் பேசியதைக் கேட்டு மேயர் பிரியா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சிரித்ததாகவும், ஆனால் அருகில் இருந்த எம்பி கனிமொழி முகம் சுழித்ததாகவும் சமூக வலைதளங்களில் வைரலான காணொளிகள் மூலம் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அவதூறு பேச்சு குறித்து தவெக நிர்வாகி உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் மற்றும் அவதூறாகப் பேசிய கவுன்சிலர் ஆகிய இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Abuse and death wishes met with smiles and laughter on stage? The hypocrisy of DMK leaders knows no bounds! 😡 Shame on @PriyarajanDMK and @KanimozhiDMK for endorsing such vile behavior against #CMVijay with their silence! pic.twitter.com/EZPR9zWBbV
— George (@georgeviews) October 19, 2026