திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் 11 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்களை களமிறங்குகிறது திமுக. அதை தவிர திமுகவின் சீனியர் வேட்பாளர்கள் பலரும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை- தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு; வேலூர்- கதிர் ஆனந்த்; நீலகிரி (தனி)- ஆ.ராசா; தேனி- தங்க தமிழ்செவன் மற்றும் தூத்துக்குடி- கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் பட்டியல்
மக்களவைத் தேர்தல் 2024: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!#SunNews | #DMK | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 pic.twitter.com/OTF94TgFDb— Sun News (@sunnewstamil) March 20, 2024
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களும், அவர்களின் தொகுதிகளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, சென்னை வடக்கு- ராயபுரம் மனோ, சென்னை தெற்கு- ஜெயவர்த்தன், காஞ்சிபுரம் தனித்தொகுதி-ராஜசேகர், அரக்கோணம்-ஏ எல் விஜயன், கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ், நாமக்கல்- தமிழ்மணி, தேனி நாராயணசாமி உள்ளிட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகவிருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.