
அடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றி கிடைத்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இந்த பதவிக்கு போட்டியிடும் இருவரில் ஒருவரான மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் தேசிய தலைமையிடம் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க இன்று டெல்லி செல்லவுள்ளார்.
முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இன்னொருவரான மூத்த தலைவர் சித்தராமையா, கட்சி தனக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னதாகவே நேற்று டெல்லி சென்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய கட்சியின் தலைமை நேற்று இது குறித்து விவாதித்தது.
details
அடுத்த 24 மணி நேரத்திற்குள் கர்நாடக முதல்வராக யார் பதவியேற்பார் என்பது தெரிந்துவிடும்
ஞாயிற்றுகிழமை அன்று, காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, யார் முதல்வர் ஆக வேண்டும் என்பது குறித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டன.
இந்த வாக்கு பதிவின் முடிவுகள் குறித்து, நேற்று கட்சி தலைவர்கள் விவாதித்தனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் கர்நாடக முதல்வராக யார் பதவியேற்பார் என்பதை கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, பாஜகவை தென் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.
ஆனால், முதலமைச்சரை தேர்வு செய்வது காங்கிரஸுக்கு பெரும் சோதனையாக இருக்கும். தேர்தலுக்கு முன்னதாக, சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே பெரும் பிளவு இருந்தபோதிலும், காங்கிரஸால் ஒரு ஒற்றுமையான முன்னணியை தேர்தலில் முன்னிறுத்த முடிந்தது.