
தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனால் மக்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் ஊர்களுக்கு செல்ல பயணங்களை மேற்கொண்டுள்ளதால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
அனைத்திலும் டிக்கெட்களும் விற்று தீர்ந்ததால் பெரும்பாலான மக்கள் விமான சேவையினை நாடி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று(நவ.,10) சென்னையிலிருந்து மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம், திருச்சி செல்லும் விமானங்களின் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே விமானங்களின் கட்டணம் வழக்கத்தினை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கட்டணம்
அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் விமான பயணம் மேற்கொள்ளும் மக்கள்
அதன்படி, சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2,390 ஆகும்.
ஆனால் தீபாவளி பண்டிகையினை காரணமாய் கொண்டு இன்றும்(நவ.,10), நாளையும்(நவ.,11) இதன் கட்டணம் ரூ.11,504 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல ரூ.4,273 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,287 வசூலிக்கப்படுகிறது.
கோவை செல்ல ரூ.3,315ஆக இருந்த கட்டணம் அடுத்த 2 நாட்களுக்கு ரூ.13,709 ஆகும்.
திருச்சி செல்வதற்கான கட்டணம் ரூ.3,190ஆக இருந்த நிலையில், ரூ.13,086ஆகவும்,
மதுரை செல்ல வழக்கமான கட்டணம் ரூ.3,314ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,415 வசூலிக்கப்படுகிறது.
இதுபோல் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்த நிலையிலும் பண்டிகையை தங்கள் குடும்பத்தாரோடு கொண்டாட வேண்டும் என்னும் ஆர்வத்தில் பலரும் விமானத்தில் தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.