தீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டு தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிறப்பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான மக்கள் பயணம் செய்வர்.
இவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் நவம்பர் 9ம்.,தேதி முதல் இந்த சிறப்பு பேருந்துகள் சேவையானது துவங்கப்படும் என்றும்,
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டுமே வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளோடு இணைந்து கூடுதலாக 4,675 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் சென்னையிலிருந்து மட்டும் கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் இருந்து பிறப்பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு
#BREAKING தீபாவளிக்கு நவ.9 முதல் சிறப்புப் பேருந்துகள் #Deepavali #TNGovt #TNBus #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/MnWq2rgVxD
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 28, 2023