NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "தேர்தல் பத்திரங்களின் விவரங்களை நாளைக்குள் பகிருங்கள்": எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "தேர்தல் பத்திரங்களின் விவரங்களை நாளைக்குள் பகிருங்கள்": எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

    "தேர்தல் பத்திரங்களின் விவரங்களை நாளைக்குள் பகிருங்கள்": எஸ்பிஐயின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கோரிக்கையை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை நாளைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான  விவரங்கள் 

    மேலும், நாளைக்குள் தகவலை பகிராவிட்டால், அரசு நடத்தும் எஸ்பிஐ வங்கி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    மேலும், மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம்(EC) அது குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்பிஐ
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை  கனமழை
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரளா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025