Loading...
விடுமுறை நாளில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்த தடை: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கடும் எச்சரிக்கை
விடுமுறை நாளில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்த தடை

விடுமுறை நாளில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்த தடை: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கடும் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
02:29 pm

செய்தி முன்னோட்டம்

அரசு பொது விடுமுறை மற்றும் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகள் எவ்விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் நர்சரி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள்களில் பள்ளி வளாகத்தில் நேரடி வகுப்புகளோ அல்லது வீடுகளில் இருந்தபடியே கற்கும் இணையவழி சிறப்பு வகுப்புகளோ நடத்தக் கூடாது எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

விதியை மீறினால் கடும் நடவடிக்கை

அனைத்துப் பள்ளிகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) வாயிலாக இந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு தொடர் கல்விச் சுமை அளிக்கும் வகையில் செயல்படும் பள்ளிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறிச் சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT