
தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக கற்பிப்பதை 2024-25ம் கல்வியாண்டிற்குள் உறுதி செய்ய வேண்டும்.
அதே போல் தகுதியான ஆசிரியர்கள் கொண்டு தமிழ் கற்பிக்கப்படுகிறதா என்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் பாடத்தினை மாணவர்களுக்கு திறன்பட கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மேலும் 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கூடுதல் மொழியாக தமிழ் பாடத்தினை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!#SunNews | #TNPrivateSchool | #Tamil pic.twitter.com/1k6QEgFt19
— Sun News (@sunnewstamil) May 23, 2023