Page Loader
அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி 
அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி

அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி 

எழுதியவர் Nivetha P
Apr 12, 2023
06:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தங்களது கலை திறமைகளை வெளிக்கொண்டுவர ஒன்றியம், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழகஅரசு கலை திருவிழாவினை நடத்தியது. இதில் மாவட்ட அளவில் வெற்றிப்பெறுவோருக்கு மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் மற்றொரு பகுதியாக கல்விசாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளியில் பயிலும் 6முதல் 9ம்வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், வானவில்மன்றம், வினாவிடை மன்றம் மற்றும் சிறார் திரைப்படமன்றம் ஆகிய 4 மன்றங்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 'திரைப்படத்தின் ஓர் காட்சியை இயக்குதல்' என்னும் தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.குரும்பப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் 7ம்வகுப்பு மாணவி கீர்த்தனா வெற்றிப்பெற்றார்.

பள்ளி 

தென்னிந்திய வீடுகள் குறித்த ஆவணப்படம்

இதற்கான இறுதிப்போட்டி மாநில அளவில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 150 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு 15 பேர் அடங்கிய குழுக்களாகவும், அதில் கதை மற்றும் ஆவணப்படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட 14 பேர் அடங்கிய குழுவானது தென்னிந்திய வீடுகள் குறித்து ஆவணப்படம் எடுத்தனர். இப்படத்தினை இயக்கிய மாணவி கீர்த்தனா சிறந்த இயக்குனராக வெற்றிப்பெற்றார். இதன் மூலம் அவர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தவாறு அமெரிக்கா செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.