Page Loader
அமமுக பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி.தினகரன் தேர்வு
அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த பதிவியில் நீடிப்பார்கள்.

அமமுக பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி.தினகரன் தேர்வு

எழுதியவர் Sindhuja SM
Aug 06, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

இன்று சென்னையில் நடந்த அமமுக பொது கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமமுக பொது கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் அமமுக துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக கட்சியின் பொது செயலாளர், தலைவர், துணை தலைவர் ஆகிய பதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இது தவிர, திமுக அரசுக்கு எதிராகவும், காவிரி பிரச்சனைக்கு எதிராகவும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், அமமுக கட்சியின் பொது செயலாளராக மீண்டும் டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் தலைவராக சி.கோபாலனும், துணை தலைவராக அன்பழகனும் நியமிக்கப்பட்டனர். அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த பதிவியில் நீடிப்பார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

அமமுக பொது கூட்டத்தில் புதிய தலைவர்கள் தேர்வு