
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டு வந்த நேரத்தில் தற்போது அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, நடிகர் விஜய் இந்த கொடியை வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்வார் என தவெக நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொடி அறிமுக விழா கட்சியின் தலைமை இடமான பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
இதற்கான கொண்டாட்ட பணிகள் பனையூர் அலுவலகத்தில் படுவேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக கட்சி அலுவலகத்தின் முன் 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணியும் சமீபத்தில் நிறைவு பெற்றதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
தவெக கொடி அறிமுக விழா
தவெக - கொடி அறிமுக விழா நல்லபடியாக நடைபெற வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து தீவிர விரதம் இருப்பதாகவும் தகவல்#tvknewcoachreveal | #TamilagaVettriKazhagam | #vijay | #TVKVijay | @tvkvijayhq | #malaimurasu pic.twitter.com/R1cV2am5EJ
— Malaimurasu TV (@MalaimurasuTv) August 19, 2024