
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே வடமாநிலங்களில் கனமழை பெய்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வப்போது தமிழ்நாட்டிலும் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே பெய்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் இன்றும்(ஆகஸ்ட்.,17),நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவல்படி, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் ஆகஸ்ட்.,18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வானிலை ஆய்வு மையம்
#வானிலைசெய்திகள் | வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!#SunNews | #WeatherUpdate | #Depression pic.twitter.com/lbayPtJihD
— Sun News (@sunnewstamil) August 17, 2023