
டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது
செய்தி முன்னோட்டம்
பனஸியா பயோடெக்கின் டெங்கு தடுப்பூசிக்கான 3வது கட்ட சோதனை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) உடன் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் மருந்து போலிகளை வைத்து மேற்கொள்ளப்படும் 3வது கட்ட சோதனையானது குருட்டு தனமாக நடத்தப்பட இருக்கிறது.
அதாவது, உண்மையான மருந்துகள் யாருக்கு போடப்படுகிறது, மருந்து போலிகள் யாருக்கு போடப்படுகிறது என்பது மருத்துவர்களுக்கும் தெரியாது, மருந்தை எடுத்துக் கொள்பவர்களுக்கும் தெரியாது.
"ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறுவனம் தயாராகிவிடும். எனவே, 3வது கட்ட சோதனைகள் சில மாதங்களில் தொடங்கப்படும்." என்று ICMRஇன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்துள்ளார்.
details
1 மற்றும் 2வது கட்ட சோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது
டெங்கு காய்ச்சலைத் தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த சோதனையின் முதன்மை நோக்கமாகும்.
மேலும், இந்த சோதனை தடுப்பூசியின் பாதுகாப்பை ஆராயும்.
1 மற்றும் 2வது கட்ட சோதனைகள் இந்தியாவில் உள்ள ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்டது என்று ICMR இன் தொற்று நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா கூறியுள்ளார்.
3வது கட்ட சோதனையில், 18-80 வயதுடைய 10,335 ஆரோக்கியமான நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த சோதனை 20 தளங்களில் நடத்தப்படும் என்றும் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்துள்ளார்.
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் நோயாகும். இது நான்கு வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில் இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக இருந்து வருகிறது.