Page Loader
டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்
விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்

டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
May 28, 2024
07:45 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியின்படி, விமானத்திற்குள் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், விமானப் பாதுகாப்புக் குழுவும் வெடிகுண்டு செயலிழப்புப் படையும் தற்போது தளத்தில் இருப்பதாக விமானநிலைய அதிகாரி கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த இண்டிகோ விமானம் அதிகாலை 5.35க்கு டெல்லியிலிருந்து புறப்பட இருந்தது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் விரைவு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் அவசர கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

embed

அவசர கதவு வழியாக பயணிகள் வெளியேற்றம்

#BREAKING | டெல்லி - வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்#SunNews | #Indigo | #BombThreat pic.twitter.com/tTeUpNXoM8— Sun News (@sunnewstamil) May 28, 2024