Page Loader
கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல் 

கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல் 

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2024
11:21 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். "நிலவும் குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் அடுத்த ஐந்து நாட்களுக்கு மூடப்படும்" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். டெல்லியில் குளிர்கால விடுமுறைக்காக ஜனவரி 1 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், குளிர்கால விடுமுறையை ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

எவ்ஜ்க

 அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் 

ஆனால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய கல்வி இயக்குனரகம் "தவறாக வெளியிடப்பட்டது" என்று கூறி அந்த உத்தரவை திரும்பப் பெற்றது. குளிர் காலநிலைக்கு மத்தியில் பள்ளிகளை திறப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் கடுமையான குளிரை அனுபவித்து வருகின்றன. நேற்று, தேசிய தலைநகரில் அதிகபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட நான்கு புள்ளிகள் குறைவாக உள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.