டெல்லி நீதிபதிக்கு கொலை மிரட்டல்: சிஜேபி நிர்வாகிகள் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளர்களான அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரின் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதிக்கு (SEM) அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை நடவடிக்கை ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு, 5 நாட்கள் நீதிபதி காவலில் வைக்கப்பட்டுள்ள சிஜேபி நிர்வாகிகளின் வழக்கு விசாரணை நடைபெற்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரட்டல் வந்தததாக சிறப்பு நீதிபதி அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறை அடையாளம் தெரியாத நபர்கள் மீது 'நான்-காக்னிசபிள் அறிக்கை' பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விவரங்கள்
மிரட்டல் விவரங்கள்
நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தது யார் மற்றும் குறுஞ்செய்தியின் பின்னணி என்ன என்பது குறித்த முழுமையான தகவல்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.
இச்சம்பவம் குறித்துப் பேசிய சிஜேபி சட்டக் குழுத் தலைவர் ரத்னா சிங், நீதிமன்றத்தில் தங்களது ஜாமீன் மனுவின் தகுதி குறித்து ஆராயாமல், நீதிபதிக்கு வந்ததாக கூறப்படும் மிரட்டல் செய்தியை மட்டுமே முக்கிய பிரச்சனையாக மாற்றி விசாரணையை தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் பூர்த்தியாகியிருந்த நிலையில், ஜாமீன் வழங்குவதைத் தவிர்க்கவே இந்த மிரட்டல் செய்தி நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகச் சட்டக் குழுத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.