Loading...
டெல்லி பூங்காவில் 'போலீஸ்' எனக்கூறி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பிறந்தநாளை கொண்டாட தோழருடன் சென்ற 17 வயது சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

டெல்லி பூங்காவில் 'போலீஸ்' எனக்கூறி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
01:34 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் தனது பிறந்தநாளை கொண்டாட தோழருடன் சென்ற 17 வயது சிறுமியை, 'போலீஸ்' என பொய் கூறி, துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறைக்கு அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கடந்த செப்டம்பர் 21 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கால்காஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ISKCON கோவிலுக்கு செல்லும் வழியில், தோழருடன் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் அமர்ந்து பேசி சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் அவர்களைப் பின்புறமாக அணுகியுள்ளனர்.

மிரட்டல்

"நாங்கள் போலீஸ்" என மிரட்டல்

அம்மூவரும் சிறுமியின் தோழரை தாக்கி,"நாங்கள் காவல்துறையினர். இந்த நேரத்தில் பூங்காவிற்குள் வர அனுமதி இல்லை" எனக் கூறி இருவரின் கைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அச்சமடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் பேசுமாறு கோரியுள்ளார்.

அப்போது ஆசிஃப் என்ற நபர் தனது ஜீன்ஸ்-லிருந்து துப்பாக்கியை எடுத்து மிரட்டியதுடன், மற்ற இருவரும் கத்திகளைப் பயன்படுத்திக் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து சிறுமியை பூங்காவின் இருட்டான பகுதிக்கு கடத்திச் சென்று மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இக்கொடூரத்திற்குப் பின்,"இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் கொன்று விடுவோம்; இதை வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது" என மிரட்டி இருவரின் கைபேசிகளையும் திருப்பிக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

பூங்காவை விட்டு வெளியேறியதும் சிறுமி தனது தோழரிடம் விவரத்தைக் கூறவே, அவர் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.

கைது

3 குற்றவாளிகளும் உடனடியாக கைது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிஃப், ஹேமந்த் மற்றும் அவரது தம்பி முகேஷ் ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் வழக்கறிஞரான ஹேமந்த் மற்றும் பி.எஸ்சி கணிதவியல் மாணவரான முகேஷ் ஆகியோர் அவர்களது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான ஆசிஃப் என்பவரை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி பின்வாசல் அருகே பிடித்தபோது, காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பதிலடி தாக்குதலில் அவரது காலில் துப்பாக்கிச் சூடுப்பட்டுப் பிடிக்கப்பட்டார்.

மூவரும் அப்பகுதியில் வசித்து வந்ததால் பூங்காவில் அடிக்கடி சந்தித்து நட்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT