Page Loader
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 21, 2024
11:14 am

செய்தி முன்னோட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து இன்று வெளியேறுவதாக இருந்த நிலையில், இந்த திடீர் உத்தரவு வந்துள்ளது. நேற்று விடுமுறை நீதிமன்ற அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை 48 மணிநேரம் அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அதனை நீதிபதி மறுத்து, ஜாமீன் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கெஜ்ரிவால் ஜாமீன் நிறுத்தி வாய்ப்பு