Page Loader
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கியது

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 20, 2024
08:09 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதித்ததுடன், ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட 48 மணி நேரம் அவகாசம் அளிக்குமாறு ED கோரியது. ஆனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். முன்னதாக தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று காலை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டது, ரோஸ் அவென்யூ நீதிமன்றம். கலால் கொள்கை தொடர்பான ஊழல் புகார்கள் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் மார்ச் 21 அன்று கைது செய்தது.

ட்விட்டர் அஞ்சல்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்