Page Loader
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது
விஞ்ஞானி புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது

எழுதியவர் Sindhuja SM
May 05, 2023
10:38 am

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசியத் தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால்(ATS) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஞ்ஞானி, வாட்ஸ்அப் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் "பாகிஸ்தான் உளவுத்துறை ஆப்பரேட்டிவ்" முகவருடன் தொடர்பில் இருந்ததாக ATS அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த குற்றவாளி, புதன்கிழமை கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள DRDOவின் விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அலுவலக அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

details

அதிகாரபூர்வ இரகசிய சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

"தனது பதவியை தவறாகப் பயன்படுத்திய விஞ்ஞானி, அவரிடம் இருந்த ரகசிய ஆவணங்கள் எதிரி நாட்டுக்கு கிடைத்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது தெரிந்திருந்தும், விவரங்களை எதிரி நாட்டிற்கு அளித்திருக்கிறார்" என்று ATS செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ இரகசிய சட்டத்திற்கு தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு மும்பையில் உள்ள ATS இன் கலாசௌகி பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்திய ஏவுகணையின் புகைப்படம் மற்றும் அதன் இருப்பிடத்தை அந்த விஞ்ஞானி பாகிஸ்தானிய செயல்பாட்டாளருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.