
தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
செய்தி முன்னோட்டம்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார்.
எனவே, தற்போது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே செயலில் உள்ள ஒரு உறுப்பினராக இருக்கிறார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமா விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள், அவரது ராஜினாமா "ஆழ்ந்த கவலை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இதற்கு நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா
"ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் பறிக்கப்படும்": கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன் கார்கே, இது தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியாவில் இப்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். ஏன்? நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திர அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் பறிக்கப்படும்!'' என்று கார்கே கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்பு செயல்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மத்திய அரசு அந்த அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.