
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புப் பணியக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் ஒரு வழக்கறிஞர்கள் குழு ஆஜராகி வாதாடி வருகிறது.
இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.
குஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடியின் அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடந்ததை தொடர்ந்து, இன்று அதிகாலை 3:40 மணிக்கு விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ட்னவ்க்
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த மருத்துவ சோதனைகளைத் தொடர்ந்து, அவர் நேரடியாக உள்ளூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மருத்துவ சோதனை முடிந்ததும் அவரை மீண்டும் SIT அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மனைவி நாரா புவனேஸ்வரி மற்றும் பலர் ஏசிபி நீதிமன்றத்தில் காத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது.
ஆனால், அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பாக சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.