Page Loader
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2025
11:46 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக ஒரு சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அவரது அறிவிப்புகளில் முக்கியமானதொன்று, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு. அதேபோல, பண்டிகை கால முன்பணம் ₹10,000இல் இருந்து ₹20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ₹4,000இல் இருந்து ₹6,000 ஆக உயர்வு பெற்றுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ₹1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈட்டிய விடுப்புகளை சரண செய்து பலன் பெறும் திட்டம் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

மற்ற அறிவிப்புகள்

தமிழக அரசின் மற்ற அறிவிப்புகள்

பழைய ஓய்வூதியத் திட்டங்களை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, வரும் செப்டம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை: தொழிற்கல்விக்கு ₹1 லட்சம் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ₹50,000 இதற்குமுகமாக, மகப்பேறு விடுப்புக் காலம், பதவி உயர்வுக்குத் தகுதிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 9 முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியானது. இவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.