135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!
மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'. நேற்று இரவு, 8:30 மணியளவில் மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷின் அருகிலுள்ள கடற்கரைகளுக்கு இடையில் இந்த புயல் கரையை கடக்க துவங்கியது. ரெமல் செல்லும் வழியெங்கும், மரங்கள், மின்கம்பிகள் போன்றவை வேரோடு சாய்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு குடியிருப்பு பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்குவதற்கு முன்பு, மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், கொல்கத்தாவின் பிபிர் பாகன் பகுதியில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
கரையை கடந்த ரெமால்!
#NewsUpdate | வடக்கு வங்கக்கடலில் உருவான 'ரெமல் புயல்' கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை தளர்வு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண்... pic.twitter.com/xWO62dmxsm— Sun News (@sunnewstamil) May 27, 2024