
திமுக கட்சியின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் திமுக ஆட்சி துவங்கிய நாளிலிருந்து பாஜக'வினர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வருவது வழக்கமாகிவிட்டது.
அவ்வப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஊழல் விவரங்களை ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்.
இதனால் அண்மையில் திமுக தரப்பில் அண்ணாமலை கையில் இருக்கும் வாட்ச்'சின் விலை என்ன, பில் எங்கே? என்ற எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரலானது.
அதற்கு அண்ணாமலை, ஏப்ரல் மாதம் வாட்ச் பில் வரும், அதோடு திமுக மூத்த தலைவர்கள் ஊழல் பட்டியலும் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டான நாளை காலை 10.15மணிக்கு திமுக மூத்த தலைவர்கள் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று ப்ரோமோ வீடியோவோடு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0