Page Loader
ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா?

ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2024
05:56 pm

செய்தி முன்னோட்டம்

ஊட்டி-குன்னூர் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் ஏற்கனவே மலை ரயில் சேவைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் மழை கொட்டி வருகிறது. இதில் உதகையில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே பெய்த பருவமழை காரணமாக ஏற்பட்ட மழை சரிவில் ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்தததால் அதனை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் 22ஆம் தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தென்னக ரயில்வே மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பராமரிப்பு பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post