என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவர் பிரிவு உறுப்பினர்கள், உள்ளே இருந்து பூட்டு போட்டனர்
வெளியான வீடியோ காட்சிகளில்,"NTA ஐ மூடு" போன்ற முழக்கங்களை எழுப்பிய வண்ணம் NSUI அமைப்பாளர்கள் அடங்கிய ஒரு கூட்டம் டெல்லியில் உள்ள NTA அலுவலகத்தினை முற்றுகையிடுவதை காட்டியது. நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களுக்கு எதிராக, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) உறுப்பினர்கள் பலர், டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளே இருந்து பூட்டினர். அந்த வீடியோ பதிவில் அவர்கள் கைகளில் சங்கிலிகள் மற்றும் பூட்டுகளுடன், போராட்டக்காரர்கள் டெல்லியின் ஓக்லாவில் அமைந்துள்ள என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்டதைக் காணலாம். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு கூடியிருந்த கூட்டத்தை கலைக்க தொடங்கினர்.