NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார்  பவன் கேரா
    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) கூட்டத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் சென்று கொண்டிருக்கும் போது இது நிகழ்ந்திருக்கிறது

    டெல்லி விமான நிலைய சர்ச்சை: கைது செய்யப்பட்டார் பவன் கேரா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு செல்ல இருந்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா டெல்லி விமான நிலையத்தில் வைத்து இன்று(பிப் 23) கைது செய்யப்பட்டார்.

    ஏறக்குறைய 50 காங்கிரஸ் தலைவர்கள் விமானத்தை புறப்பட விடாமல் விமானம் ஓடும் பாதையில் ஒரு அரிய போராட்டத்தை நடத்தியதை தொடர்ந்து இது நடந்திருக்கிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்(ஏஐசிசி) கூட்டத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் சென்று கொண்டிருந்த போது முதல் தகவல் அறிக்கையுடன்(FIR) விமான நிலையத்திற்கு வந்த அசாம் காவல்துறையினர், பவன் கேராவை கைது செய்தனர்.

    ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி டெல்லி விமான நிலைய டார்மாக்கில் கோஷங்களை எழுப்பியும், விமானத்தின் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    டெல்லி

    இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

    "ராய்ப்பூர் செல்லும் விமானம் 6E 204ல் இருந்து ஒரு பயணியை போலீசார் இறக்கினர். வேறு சில பயணிகளும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இறங்க முடிவு செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனையை நாங்கள் பின்பற்றினோம். அதையடுத்து, தற்போது விமானம் தாமதமாகி இருக்கிறது. மேலும் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்." என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    "என்னிடம் கையில் மட்டுமே பேக்கேஜ் இருந்தது. ஆனால், அவர்கள் எனது பேக்கேஜ்களில் சிக்கல் இருப்பதாக கூறினர். மேலும், என்னால் பயணம் செய்ய முடியாது என்றும் கூறினார்கள். பின்னர் டிசிபி(துணை போலீஸ் கமிஷனர்) உங்களை சந்திப்பார் என்றார்கள். நான் ரொம்ப நேரமாக காத்திருக்கிறேன்." என்று பவன் கேரா முன்பு கூறி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள் கேரளா
    விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம் தொழில்நுட்பம்
    நேஷனல் ஜியோகிரபிக்ஸ் நடத்திய புகைப்பட போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர் ட்ரெண்டிங் வீடியோ

    காங்கிரஸ்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025