மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள்
1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவரை வரவேற்கும் விதமாக, காங்கிரஸ் தொண்டர்கள், பாட்டியாலா ஜெயில் வாசலில், மேளதாளத்துடன் தயாராக இருக்கின்றனர். முன்னதாக, ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 1988ஆம் ஆண்டில் நடந்த சாலை மறியல் வன்முறையின் போது பாட்டியாலாவைச் சேர்ந்த குர்னாம் சிங் என்பவர் உயிரிழந்தார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிததுவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சித்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து, அவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.