Page Loader
காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை
முன்னதாக, ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை

எழுதியவர் Sindhuja SM
Mar 31, 2023
02:28 pm

செய்தி முன்னோட்டம்

1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவ்ஜோத் சிங் சித்துவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு வழியாக வெளியிடப்பட்ட தகவலின் படி, நாளை அவர் விடுவிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முன்னதாக, ஜனவரி 26 - குடியரசு தினத்தன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 58 வயதான சித்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து அவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர் மற்றும் எஸ்கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முன்னதாக, சிந்துவின் வழக்கு விசாரணை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்தியா

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம்

1988ஆம் ஆண்டில் நடந்த சாலை மறியல் வன்முறையின் போது பாட்டியாலாவைச் சேர்ந்த குர்னாம் சிங் உயிரிழந்தார். டிசம்பர் 27, 1988இல் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, சித்துவும் அவரது உதவியாளர் ருபிந்தர் சிங் சந்துவும் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே சாலையின் நடுவில் நின்ற ஒரு ஜீப்பிற்குள் இருந்தனர். அப்போது அந்த வழியாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த குர்னாம் சிங், அவர்களிடம் ஜீப்பை ஓரமாக விட சொல்லவே, அங்கு ஒரு தகராறு ஏற்பட்டது. அப்போது, சித்து, குர்னாம் சிங்கின் தலையில் அடித்ததாகவும் அதனால் தான் அவர் உயிரிழந்ததாகவும் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.