சீனா இந்தியாவின் நண்பனா? சீனா குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துக்களிலிருந்து பின்வாங்கியது காங்கிரஸ்
செய்தி முன்னோட்டம்
பாஜகவின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சீனா நமது எதிரி அல்ல என்ற கருத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது.
சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் தெளிவுபடுத்தினார்.
அவரது எக்ஸ் பக்கத்தில், "நமது மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை, வெளி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு சீனா சவாலாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தியின் முக்கிய உதவியாளராக அறியப்படும் சாம் பிட்ரோடா, ஒரு நேர்காணலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தியா சீனாவை ஒரு எதிரியாக கருதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சர்ச்சை
சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் சாம் பிட்ராடோ
சாம் பிட்ரோடாவின் அறிக்கைகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு, இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்த அவரது கருத்துக்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டன.
இதையடுத்து அவர் வெளிநாட்டு இந்திய காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
எனினும், பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல்களை அரசாங்கம் அனுமதித்ததாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டிய நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாக இந்த கருத்து உள்ளது.