
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைப்பு!
செய்தி முன்னோட்டம்
கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் வணிக பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.350.50-ம், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50-ம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வணிக பயன்பாடுகளுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் ரூ.91.50 வரை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு விலைக்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.
தற்போது வணிகப் பயன்பாடுகளுக்கான19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.171.50 வரை விலைக்குறைப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
எந்தெந்த நகரங்களில் என்னென்ன விலை:
இந்த விலைக்குறைப்புக்கு முன், கடந்த மாத விலைக்குறைப்புக்குப் பின் வணிகப் பயன்பாடுகளுக்கான 19 கிலோ எரிவாயு சமையல் சிலிண்டர்களின் விலை, டெல்லியில் ரூ.2,028, கொல்கத்தாவில் ரூ.2,132, மும்பையில் ரூ.1,980 மற்றும் சென்னையில் ரூ.2,192.50 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போதைய விலைக்குறைப்புக்குப் பின் சிலிண்டர்களின் விலை டெல்லியில் ரூ.1856.50, கொல்கத்தாவி்ல ரூ.1960.50, மும்பையில் ரூ.1808 மற்றும் சென்னையில் ரூ.2021 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்ட இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.