Page Loader
பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர் 

பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர் 

எழுதியவர் Sindhuja SM
Oct 03, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

கோவையில் இன்று(அக். 3) நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சாய்பாபா நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் திடீரென்று எழுந்து தனக்கு கடன் வழங்கப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை மேடையில் இருந்து கவனித்து கொண்டிருந்த நிதியமைச்சர், அவரை மேடைக்கு அழைத்து அனைவரின் முன்னிலையிலும் பிரச்னையை கூறுமாறு கேட்டுகொண்டார். அப்போது மேடைக்கு வந்த சதீஷ், தொழில்முனைவோர்களுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லாமல் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை என்று மைக்கில் கூறினார். அதை கேட்ட நிதியமைச்சர், அதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தன்னால் என்ன பிரச்சனை என்று பார்க்க முடியும் என்று கூறிவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் நிர்மலா சீதாராமனின் வீடியோ