Page Loader
கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி
கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

எழுதியவர் Nivetha P
Feb 10, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கனவே கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடி மதிப்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்ற 3 வளைவுகள் அமைக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.80 லட்சம்

கருணாநிதி நினைவிட வளாகத்தில் 1978 சதுர மீட்டர் பரப்பளவில் 40 சென்ட் நிலத்தில் அருங்காட்சியகம்

இதனை தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமையப்பெறவுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அருங்காட்சியகம் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது. கருணாநிதி நினைவிட வளாகத்தில் 1978 சதுர மீட்டர் பரப்பளவில் 40 சென்ட் நிலத்தில் இந்த அருங்காட்சியகம் அமையப்பெறவுள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைக்க திட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது இதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ள மீனவர்கள், இந்த நினைவு சின்னம் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடலின் வளமும் பாதிப்படையும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.