ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக சென்ற ஜனவரி 27 அன்று, ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு கட்சி அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது என்றும், ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். "ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் சந்தித்தேன்" என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இது சார்ந்த அறிவிப்புகள், பிப்ரவரி 12ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டசபையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது