Page Loader
12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 
12 மணிநேர வேலை மசோதாவை திரும்ப பெற்றார் முதல்வர் ஸ்டாலின்

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
12:53 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய கூறப்பட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. கடந்த நாட்களுக்கு முன்பு மசோதா சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலை செய்ய நிறைவேற்றப்பட்டது. இதற்கு, தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மே தின தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறப்பட்டதாக கூறினார். மேலும், இவை எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து, 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post