ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
செய்தி முன்னோட்டம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை மக்களின் மேம்பாட்டிற்காக வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கொளத்தூரில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் சந்தை அமைத்தல் பணி, ராயபுரம் மூலகொத்தலத்தில் ரூ14.31 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்தல் பணி, புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் நவீன சலவைக் கூடம் அமைத்தல் பணி மற்றும் ரூ.16.96 கோடி மதிப்பீட்டில் புழல் ஏரிக்கரை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார்
கொளத்தூர், ராயபுரம், புரசைவாக்கம், புழல் ஏரிக்கரை உள்ளிட்ட ரூ.115.58 கோடி மதிப்பீட்டிலான இந்த புதிய திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதில் ரூ.5.22 கோடியில் அயனாவரத்தில் அமைக்கப்பட உள்ள சலவைக் கூடம் மற்றும் நியாயவிலைக் கடைகளும் அடங்கும்.
மேலும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 4 திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நடந்த விழாவில், முதல்வருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மேயர் பிரியா, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.