
நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடி வரும் தமிழக அரசு, அவரது நினைவாக சிறப்பு நாணயம் வெளியிடுவதற்காக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எனினும், மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இதில் தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை.
கமல்ஹாசன்
கமல்ஹாசனுக்கு சிறப்பு நாணயம் வழங்கிய முதல்வர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில், கமல்ஹாசனுக்கு நினைவு நாணயத்தை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.
அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்." எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கமல் ஹாசனின் எக்ஸ் பதிவு
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2024
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள்… pic.twitter.com/jp71vihQga