செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு
செய்தி முன்னோட்டம்
சட்டம் பேசுவோம்: இந்து சட்டங்களின்படி, செல்லாத திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பரம்பரை சொத்தில் பங்கு பெற தகுதியுடையவர்களா அல்லது சொத்துக்களில் இணை உரிமை அவர்களுக்கு உள்ளதா என்ற சட்டப் பிரச்சினையால், 2011 முதல் நிலுவையில் உள்ள ஒரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
டக்ஜ்
செல்லாத மற்றும் செல்லத்தக்க திருமணம் என்றால் என்ன?
செல்லாத திருமணங்கள்(Void marriage) மற்றும் செல்லத்தக்க திருமணங்கள்(voidable marriage) என்று இரு வேறு திருமண வகைகள் இந்து திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள், திருமணமான உறவில் இருக்கும் போது இன்னொருவரை மணப்பது ஆகியவை செல்லாத திருமணங்கள் ஆகும். அதாவது, அப்படிப்பட்ட திருமணங்களை சட்டம் ஏற்றுக்கொள்ளாது. இது போன்ற திருமணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கணவன் மனைவி என்ற அந்தஸ்து கிடையாது.
திருமணம் செய்து கொண்ட இருவரின் விருப்பத்தின் பேரில் அப்படிப்பட்ட ஒரு திருமணமே நடக்கவில்லை என்று சட்டத்தால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள திருமணங்கள் செல்லத்தக்க திருமணங்கள் என்று கூறப்படுகின்றனர். திருமணம் செய்து கொண்டவர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த திருமணம் நடந்திருந்திருந்தால்(அல்லது வேறு பிரச்சனைகள் இருந்தால்) அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கும்.
டொய்க்வ்ன்
செல்லாத/செல்லத்தக்க திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கான சொத்துரிமை
ஆனால், நீதிமன்றம் அறிவிக்கும் வரை அந்த திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக தான் இருக்கும்.
இந்த இரண்டு வகை திருமணங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. செல்லாத திருமணங்கள், முதலில் இருந்தே சட்டத்தின் படி செல்லாத திருமணங்களாகும்.
செல்லத்தக்க திருமணங்கள், திருமணம் செய்து கொண்டவர்களின் விருப்பத்தின் பேரில் செல்லாது/செல்லும் திருமணம் என்று மாற்றி வரையறுக்கப்படலாம்.
விவாகரத்திற்கும் செல்லாத திருமணங்களுக்கும் சம்மந்தம் இல்லை.
இந்நிலையில், தற்போது செல்லாத/செல்லத்தக்க திருமணங்களின் மூலமாக பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உய்ட்வ்
2011ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை: உச்ச நீதிமன்றம்
செல்லாத/செல்லத்தக்க திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கான சொத்துரிமை பிரச்சனை பல வருடங்களாக நிலுவையில் உள்ளது.
2011 ஆம் ஆண்டில், இது குறித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், "செல்லாத அல்லது செல்லத்தக்க திருமணத்தின்" மூலம் பிறக்கும் குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களுக்கு மட்டுமே உரிமை கோர முடியும், பிறரது சொத்துக்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோரின் பரம்பரை சொத்துக்களுக்கோ அவர்களால் உரிமை கோர முடியாது என்று கூறியிருந்தது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று நேற்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"மாறிவரும் சமூகத்தில் சட்டம் நிலையானதாக இருக்க முடியாது..." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டுவுக்
பெற்றோர் சொத்துக்களில் மட்டுமல்ல பரம்பரை சொத்துக்களிலும் குழந்தைகளுக்கு உரிமை உண்டு
கடந்த மாதம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக பல வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில், "ஒவ்வொரு சமூகத்திலும் சட்டபூர்வமான சமூக விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படுவதால், கடந்த காலத்தில் சட்டவிரோதமாக இருந்தவை இன்று சட்டப்பூர்வமாக கருதப்படுகின்றன. மாறிவரும் சமூகத்தில் சட்டம் நிலையானதாக இருக்க முடியாது." என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
எனவே, இந்து சட்டங்களின்படி, செல்லாத/செல்லத்தக்க திருமணங்களில் பிறந்த குழந்தைகளுக்கும் இனி அவர்களது பெற்றோர் மற்றும் பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.