சென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இங்கு அனைத்து பதிப்பகம் சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் புத்தக பிரியர்கள் எப்போது இக்கண்காட்சி நடக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பர். இங்கு விற்கப்படும் புத்தகங்கள் சிறப்பான தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்நிலையில் இந்தாண்டிற்கான 47வது-புத்தக கண்காட்சி வரும் 2024ம்.,ஆண்டு ஜனவரி.3ம்.,தேதி துவங்கி ஜனவரி 21ம்.,தேதி வரை நடக்கவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த புத்தக கண்காட்சி நடக்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ம்.,தேதி மாலை 4.30 மணியளவில் துவக்கி வைக்கவுள்ளார். மேலும் இந்த கண்காட்சி காலை 11-8.30 வரை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.