Page Loader
பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2024
06:39 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 30 வயது நபர் தனது விரலைத் தானே துண்டித்து கோவிலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தீவிர ஆதரவாளரான துர்கேஷ் பாண்டே, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக ஆரம்பகாலப் போக்குகள் தெரிவித்ததை அடுத்து, ​​ஆரம்பத்தில் மனமுடைந்து போனார். ஆனால், அதன் பிறகு பாஜக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான 272 இடங்களைத் தாண்டியதை அறிந்ததும், அவர் தனது விரலை துண்டித்து உள்ளூர் காளி கோயிலில் காணிக்கையாக கொடுத்தார்.

இந்தியா 

மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை

பின்னர் பாண்டே தனது காயத்தில் ஒரு துணியை கட்டி இரத்தப்போக்கை நிறுத்த முயன்றார். ஆனால் போதிய சிகிச்சை அளிக்கப்படாததால், நேரம் ஆக ஆக அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதனையடுத்து, அவர் உடனடியாக சமாரியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது காயத்தின் தீவிரம் காரணமாக சுகாதார மையம் அவரை அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது. அவர் மருத்துவக் கல்லூரிக்கு சென்றதும், மருத்துவர்களால் அவரது உடல்நிலையை சரி செய்ய முடிந்தது. ஆனால், சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதால், அவர்களால் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை.