மக்களே, சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்! விரைவில் வருகிறது சட்டம்
செய்தி முன்னோட்டம்
சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி பொதுமக்கள் கார் வாங்கும் போது, பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
முன்னர் வீட்டுக்கு ஒரு கார் மட்டுமே இருந்த நிலையில், தற்போது தனி நபரின் கார் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சென்னையில் 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 92 லட்சம் கார்கள் இருந்தது. அது இந்த 2 ஆண்டுகளில் அதிகரித்தே உள்ளது.
பொது இடங்களில் 14,000 கார்கள் நிறுத்தும் வசதி மட்டுமே உள்ளது. மற்றவர்கள் சாலைகளில் கார்களை நிறுத்துகின்றனர்.
இஇது சாலைகளில் நெரிசலை ஏற்படுத்துவதால் அதை தவிர்க்கும் பொருட்டு இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
மஹாராஷ்ட்ராவை தொடர்ந்து சென்னையிலும் அமல்படுத்த திட்டம்
இந்த பரிந்துரையை மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. பரிந்துரைப்படி, ஒரு வாகனத்தை பதிவு செய்யும்போது, வாங்குபவரின் வீட்டில் பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதே போன்றதொரு உத்தரவு சமீபத்தில் மஹாராஷ்டிராவில் போடப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: "ஒரே ஒரு கார் பார்க்கிங் இடம் இருந்தாலும், மூன்று கார்கள் வைத்திருப்பது சாலையில் நிறுத்தப்பட வேண்டும், இது சுற்றுப்புற வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும். அதனால் புது கார் வாங்கும்போது சமர்ப்பிக்கப்படும் பார்க்கிங் சான்று, கார் வாங்குவதை கட்டுப்படுத்துவதோடு, பொது போக்குவரத்தையும் ஊக்குவிக்க உதவும்."