
சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் எஸ்.அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இனிமேல் 25 விதிமீறல்களுக்கு பதிலாக, வெறும் 5 முக்கிய போக்குவரத்து குற்றங்களுக்கு மட்டுமே நேரடி அபராதம் விதிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் காரணமாக, கடந்த நாட்களாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் போது, பொது மக்கள் மீது பெருமளவில் அபராதங்கள் விதிக்கப்படுவதும், சில நேரங்களில் போலீசாரின் மீறிய செயற்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்ததும் காரணமாக, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | 5 விதிமீறல்களுக்கு மட்டுமே நேரடியாக அபராதம் விதிக்க போக்குவரத்து காவலர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு.#SunNews | #GreaterChennaiTrafficPolice pic.twitter.com/WEe2MjiSCO
— Sun News (@sunnewstamil) May 21, 2025
முக்கிய விதிமீறல்கள்
5 முக்கிய விதிமீறல்கள்
Spot fine விதிக்க அனுமதிக்கப்பட்ட 5 முக்கிய விதிமீறல்கள்:
1. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்
2. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லுதல்
3. ஒன்வேயில் செல்லுதல்
4. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
5. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்தல்
இந்த உத்தரவு உடனடியாக அமலில் வரும் எனவும், பொதுமக்கள் மீது அழுத்தம் வரக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்கள் சார்பில் வரும் புகார்களை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த நடவடிக்கை, போலீஸ் துறையின் செயல்பாட்டில் நேர்மறை மாற்றம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.