Page Loader
நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை

நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
08:13 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறவுள்ளது. இந்த சான்றிதழை பெறுவதற்காக, இந்த கடற்கரையில் பல உலக தர வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சான்றிதழ், டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் மற்றும் பாதுகாப்பு ஆகிய 33 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெறப்பட்ட கடற்கரை பாதுகாப்பான மற்றும் சுகாதாரம் கொண்டதாக இருக்க வேண்டும். நீலக்கொடி பட்டியலில் இடம் பெறும் கடற்கரை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும்.

embed

Twitter Post

சென்னை மெரினா கடற்கரைக்கு நீல கொடி சான்றிதழ் பெற சென்னை மாநகராட்சி திட்டம். ரூ.5 கோடியே 62 லட்சம் செலவில் இதற்கான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டது#marina | #blueflag | #chennai | #NewsUpdate | #malaimurasu pic.twitter.com/LFJ8Y33wA2— Malaimurasu TV (@MalaimurasuTv) October 22, 2024 சென்னை மெரினா கடற்கரைக்கு நீல கொடி சான்றிதழ் பெற சென்னை மாநகராட்சி திட்டம். ரூ.5 கோடியே 62 லட்சம் செலவில் இதற்கான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டது#marina | #blueflag | #chennai | #NewsUpdate | #malaimurasu pic.twitter.com/LFJ8Y33wA2— Malaimurasu TV (@MalaimurasuTv) October 22, 2024

வசதிகள்

ஒரு மாதத்தில் முடிக்கப்படவுள்ள கட்டமைப்பு பணிகள்

உலகளவில் 4154 கடற்கரைகள் இதுவரை நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தியாவில், மெரினா கடற்கரையை தவிர, ஒடிசா, குஜராத், கேரளா, அந்தமான், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பிற கடற்கரைகள் முன்பே இந்த சான்றிதழை பெற்றுள்ளன. முன்னதாக இதுகுறித்து சென்னை மாநகராட்சி 5.62 கோடி ரூபாய்க்கு அமைப்பு பணிகளுக்கான டெண்டர் விடுத்துள்ளது. இதற்கான பணிகள் நவம்பர் 15க்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். அதில் LED விளக்குகள், சோலார் பவர், CCTV கேமர்கள், தனி கழிவறைகள் மற்றும் நடைபாதைகள் அடங்கும். கட்டமைப்பு பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு சான்றிதழ் பெறுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.